அக்.27-ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி: தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடக்கிறது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்குகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது.

இதில், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகள் பங்கேற்கின்றன.

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு சனி, ஞாயிறுகளில் (நவ.4, 5, 18, 19) நடைபெற உள்ளன. இதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், உயிரிழந்தவர்கள் பெயர் நீக்கம் தொடர்பான பரிந்துரைகளை இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்குவார்கள். அதன் அடிப்படையில், உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்