கடந்த 2022-23ம் ஆண்டில் 17,328 மின்திருட்டுகள் கண்டுபிடிப்பு: அபராதமாக ரூ.103 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2022-23-ம் ஆண்டில் 17,328 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் மின் திருட்டால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க மின்வாரியம், கண்காணிப்பு டிஜிபி தலைமையில் அமலாக்கப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. இப்பிரிவில் உள்ள அதிகாரிகள் மின்திருட்டு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன்படி, 2022-23-ல் 17,328 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22-ல் 13,145 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.80 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2018-19-ல் 18,453 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.106 கோடி வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது விழாக்காலம் தொடங்கி உள்ளதால், கடைகள், வணிக நிறுவனங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்படும். அதேபோல், பல இடங்களில் சிறப்பு சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த இடங்களில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அங்கெல்லாம் மின்திருட்டைத் தடுக்க கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்