சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள `ஹமூன்’ புயலானது தீவிர புயலாக வலுபெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `ஹமூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் நாளை (அக்,25 ஆம் தேதி) அதிகாலை வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.25) காலை வங்கதேசம் டிங்கோனா தீவு - சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஹமூன் புயலானது தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் ஹமூன் புயல் நகர்ந்து செல்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும்
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago