சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெறும் பயனாளிகள் விவரங்களை மாதம்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு ஆய்வுகளின் மூலம் புதுப்பிக்கப்படும் பயனாளிகளின் பட்டியலில் இருந்து யாரேனும் நீக்கப்பட்டால் அவர்கள் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
திமுகவின் தேர்தல் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக,1.68 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செப்.14, 15 தேதிகளில் வரவு வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு உரிமைத் தொகை வரவில்லை என்று தெரிவித்ததால், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், இந்த மாதம் தகுதியான 5,041 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு தொகை செலுத்தப்பட்டது. மேலும், உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு இந்த மாதம் கடந்த அக்.14-ம் தேதியே ரூ.1,000 உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
அந்த வகையில் இந்த மாதம் 1 கோடியே 6 லட்சத்து 48,406 மகளிருக்கு ரூ.1064 கோடியே, 84 லட்சத்து 6 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் முறையாக வங்கிக்கணக்கு இல்லாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சலகம் மூலம் உரிமைத் தொகை அனுப்பப்பட்டுள்ளது.
» பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதாக இபிஎஸ் நாடகம்: முதல்வர் ஸ்டாலின் சாடல்
» வாச்சாத்தியில் சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதி வைத்தியநாதன் பங்கேற்பு
இந்நிலையில், மாதம்தோறும் பயனாளிகள் விவரங்களை சரிபார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மாதம் தோறும் இறப்பு பதிவு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தரவுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்களின் பணியாளர்கள் பற்றிய தரவுகள், சமூக பாதுகாப்புத்திட்ட ஓய்வூதிய தரவுகள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய தரவுகள், வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
காலாண்டு முறையில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடைமை தொடர்பான தகவல் தளங்கள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அரையாண்டு அடிப்படையில், தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின் பயன்பாடு ஆகியவற்றையும் ஆண்டுதோறும் வருமானவரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்துவரி குறித்த தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து நிகழ்நேர முறையில் ஆய்வுசெய்து, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பட்டியலை இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பித்தல் மூலம் நீக்கப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். இதுகுறித்து பயனாளி மேல்முறையீடு செய்ய விரும்பினால் இணையதளத்தில் முறையீடு செய்யலாம்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணையதளம் வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகள் விவரங்களை, சம்பந்தப்பட்ட விஏஓக்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று, மாதம்தோறும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகள் பட்டியலை, மாதம்தோறும் 2-ம் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசின் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago