பார்மா நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் மருந்து, ரசாயனம் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் 5 பார்மா நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 18-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

கவர்லால் குழுமத்தின் கீழ் செயல்படும் காவ்மன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், மாதவரத்தில் உள்ள மனிஷ் குளோபல் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் கிடங்கு, ஆதிஸ்வரர் எக்ஸ்பியன் என்ற நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல சென்னையில் 5 நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்