சென்னை: காரைக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு பண்டிகைகால சிறப்புக்கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை சென்ட்ரல் - காரைக்குடி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண். 06039/40) இன்று (22-ம் தேதி) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில்நாளை (23-ம் தேதி) காரைக்குடியில் இருந்து 9.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதேபோல், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே நாளை மறுதினம் (24-ம் தேதி) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06046/45) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மறுமார்க்கத்தில், இந்த ரயில் 25-ம் தேதி எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 11.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago