ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்காக தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு (அக்.21, 22) விடுமுறை இருப்பதால் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வருகை தந்தவர்களால் விடிய விடிய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதன்படி, இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 1.51 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். இதேபோல், சென்னையில் இருந்து 1,280 ஆம்னி பேருந்துகள் வாயிலாக 51,200 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

மெட்ரோ ரயில்களில்.. இவ்வாறு சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக இரவு 8 முதல் 10 மணி வரை 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு 3.60 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 28,021 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், நேற்றும் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 950 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. விரைவு பேருந்துகளில் பயணிக்க நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள், கோயம்பேடு, பூவிருந்தவல்லி பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் போன்ற இடங்களில் இருந்து பயணிகள் வழக்கம்போல சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களைத் தவிர்த்து இதர பயணிகள் பேருந்துகளில் பயணச்சீட்டு எடுத்து பயணித்தனர். இதனால் நேற்று பிற்பகல் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் ஊர் சென்றதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டதைவிட கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது. ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை கடந்த 18-ம் தேதி முதல் நேற்று வரை 8,635 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 1,545 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், ரூ.24.53 லட்சம் வரி விதிக்கப்பட்ட நிலையில், ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பெரும்பாலான தென்மாவட்ட ரயில்கள் இயக்கப்படும் எழும்பூர் ரயில்நிலையத்திலும், மேற்கு மாவட்ட ரயில்கள் இயக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவதால், அங்கு செல்வதற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் பயணித்தனர். விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து, இடம் பிடித்து பயணித்தனர். ஒரு சிலர் முண்டியடித்து இருக்கைகளை பிடித்தனர். பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு, பேருந்து, ரயில்கள், சொந்த வாகனங்கள் என சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று பயணமாகினர். இவ்வாறு பெரும்பாலானோர் கடந்த 2 நாட்களில் பயணித்த நிலையில், நாளையும், நாளை மறுநாள் விடுமுறை என்பதால் இன்றும் சிலர் பயணிக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் , சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்