மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என தொழிலாளர்களின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி நேரிட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மங்கைமடம் பக்கிரிசாமி, முட்லூர் மாசிலாமணி, நாகை வடக்கு பொய்கைநல்லூர் மாரியப்பன், தில்லையாடி மணிவண்ணன் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில், மணிவண்ணன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேர் நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை முடிந்து மணிவண்ணன், பக்கிரிசாமி ஆகியோர் வீடு திரும்பிய நிலையில், மற்ற 2 பேரும் தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணம் கடந்த அக்.6-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் காயமடைந்தோருக்கு இதுவரை நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், இவ்விபத்துக்குப் பிறகு ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் கடந்த 7-ம் தேதி பட்டாசு விபத்திலும், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கடந்த 9-ம் தேதி பட்டாசு ஆலை விபத்திலும் பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு, உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், கடந்த 17-ம் தேதி சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, தில்லையாடியில் விபத்து நிகழ்ந்த இடத்தை மறுநாள் பார்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், காயமடைந்தோர் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், விபத்து நிகழ்ந்து 15 நாட்களாகியும் இன்னும் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.
» ராகவா லாரன்ஸ் - கங்கனாவின் ‘சந்திரமுகி 2’ அக்.26 ஓடிடியில் ரிலீஸ்
» 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
இது குறித்து சிகிச்சை பெற்று வருவோரின் உறவினர்கள் தரப்பில் கூறியது: 2 பேருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஒருவருக்கு வயிற்றில் கல் வந்து விழுந்ததில் மண்ணீரல் பாதிக்கப்பட்டு அகற்றப்பட்டுவிட்டது.
மேலும், அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னரும் கூட தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத அளவில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிவாரணம் வழங்கினால் சிகிச்சைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உதவிகரமாக இருக்கும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago