இந்தியன் வங்கி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் அக்.31ல் கண்காணிப்பு விழிப்புணர்வு வார வெபினார்

By செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்-2023’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், பொதுமக்கள் மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்களுக்கான இணையவழி வெபினார் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இந்த வெபினாரில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள இந்த வெபினாரில் ‘ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி’ என்ற தலைப்பில் சிறப்புவிருந்தினர்கள் உரையாற்ற உள்ளனர். ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நோக்கத்தை பொதுமக்கள் அனைவரிடமும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த வெபினார் நடத்தப்படுகிறது.

வெபினாரில் பங்கேற்க...: இந்த வெபினாரில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/IBWEBINAR என்ற லிங்க் மூலமாக அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9940268686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE