திருநெல்வேலி: மாரடைப்பு ஏற்பட்ட 17 வயது மாணவிக்கு நவீன சிகிச்சை அளித்து, திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றிஉள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதிபாலன் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அரசுப் பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவமுகாமில், அங்கு பயிலும் பிளஸ்-2 மாணவிக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். திடீரென்று அவருக்கு தலைவலி, நெஞ்சுவலி மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டது.
100 சதவீதம் அடைப்பு: இதையடுத்து, கடந்த 7-ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவிக்குஇதய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருப்பதை, இதயவியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.
» ஆன்மிகப் புரட்சி முதல் சமூகத் தொண்டு வரை - மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தலைவர்கள் புகழஞ்சலி
» பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கரூர் நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாமீன் தள்ளுபடி
தொடர்ந்து, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு, அந்த மாணவி காப்பாற்றப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக உள்ளது. மாணவி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்: பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கிராம்போ லைசிஸ் என்ற மருந்துகொடுக்கப்பட்டு, அதன் பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும், ஆனால் இந்த மாணவிக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்ததால், இந்தியாவிலேயே முதல்முறையாக கிராம்போ லைசிஸ் மருந்து கொடுக்காமல், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
இவ்வாறு டாக்டர் ரேவதிபாலன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago