மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் மறைவையடுத்து இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதனால், மதுராந்தகம் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு பணியில் 6 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எஸ்பி.சாய்பிரனீத் தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, இன்று முழுவதும் கோயிலுக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாலையில் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கை மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago