சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெற லஞ்சம் தர வழியில்லாததால், கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பல கைதிகள், உரிய மருத்துவமின்றி உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல்கள் வேதனை அளிக்கின்றன.
புழல் மத்திய சிறையில் லஞ்சம் தர மறுத்ததால், மருத்துவ வசதி மறுக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடுவழங்கவும் தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago