விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியானது: திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாகg் கொண் டாடி மகிழ்ந்தனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ' படம் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று வெளியானது.

20 ஆயிரம் திரையரங்குகள்: இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘லியோ' படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு படக்குழு தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் அரசு உத்தரவுப்படி சென்னை, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் திரையிடப்பட்டது.இதையடுத்து லியோ படம் வெளியீட்டை முன்னிட்டு அதிகாலை முதலே திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரசிகர்கள் வரவேற்பு: எனினும், ஆந்திராவில் மட்டும் பெயர் பிரச்சினை காரணமாக ‘லியோ’ தெலுங்கு பதிப்பு வெளியாகவில்லை. அதற்கு பதிலாக ‘லியோ’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களின்நல்வரவேற்பை பெற்றுள்ளது. ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக இந்த படம் வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘லியோ’ படத்தை இணையதளங்களில் வெளியிட கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று இருந்தனர். ஆனாலும் தியேட்டரில் வெளியான சிறிது நேரத்தில் 164 நிமிடங்கள் ஓடும் ‘லியோ' முழு படமும் திருட்டு இணையதளத்தில் வெளியானது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இணையதளங்களில் இருந்து ‘லியோ' படத்தை பலரும் பதிவிறக்கம் செய்ததுடன், முகநூல் உள்ளிட்ட இதர சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்தனர். ஏற்கெனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டு இணைய தளங்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்