பத்திரிகைகளை படிப்பதே முதல் ‘டியூட்டி’ - ஆட்சியர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆய்வுக் கூட்டத்தின்போது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை தரும்போதும், அவற்றுக்கு விளக்கம் அளிக்கும்போதும், முதல்வர் குறுக்கிட்டு, இந்த பத்திரிகையில் இவ்வாறு வந்துள்ளதே? இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதிலையும் பெற்று, அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

மேலும், “தினமும், குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சினை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி உங்களது மாவட்டங்களைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்த வகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலையில் முதல் பணியாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்