தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு ஐநா விருது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமையான எதிர்காலத்துக்கான நமது திராவிட மாடல் அரசின் உறுதியான ஈடுபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐநா அமைப்பின் மதிப்புமிகு 'முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023'-ஐப் பெற்றுள்ள தமிழக அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்துக்கு என் பாராட்டுகள்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமையான எதிர்காலத்துக்கான நமது திராவிட மாடல் அரசின் உறுதியான ஈடுபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன.

இந்தப் பெருமைமிகு மைல்கல்லை அடைந்ததற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு மற்றும் கடுமையாக உழைத்து வரும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE