ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம்; ஏப்ரல் முதல் அக்.15 வரை 10 லட்சம் வழக்கு: டிக்கெட் பரிசோதனையில் ரூ.57.48 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்.15-ம் தேதி வரை ஆறரை மாதங்களில், ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம், ஒழுங்கற்ற பயணம் மேற்கொண்டது தொடர்பாக 10.39லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூல மாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.57.48 கோடி சோதனை வருவாய் கிடைத்துள்ளது.

ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பது, பயணிகளின் ஒழுங்கற்ற பயணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பரிசோதனை பிரிவு தீவிரமாக செயல்படுகிறது. ஓடும் ரயில்கள், முக்கிய ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனை குழுக்கள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு, பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்கள், சாதாரண பயணச்சீட்டு எடுத்து, முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் ஆகியோரை பிடித்து, வழக்கு பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்.15-ம்தேதி வரை ஆறரை மாதங்களில் ரயில்களில் பயணச்சீட்டுஇன்றி பயணம், ஒழுங்கற்ற பயணம் மேற்கொண்டது தொடர்பாக 10.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன.

சென்னை கோட்டம் முதலிடம்: இதன்மூலமாக, தெற்குரயில்வேக்கு பயணச்சீட்டுசோதனை வருவாயாக ரூ.57.48 கோடி கிடைத்துள்ளது.அதிகபட்சமாக, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ரூ.21.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்துக்கு ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்துக்கு ரூ.8.32 கோடியும், சேலம் கோட்டத்துக்கு ரூ.8.15கோடியும், மதுரை கோட்டத்துக்கு ரூ.5.41 கோடியும், திருச்சிராப்பள்ளி கோட்டத் துக்கு ரூ.4.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரயில்களில் டிக்கெட்இன்றி பயணிப்பவர்கள், முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்மூலமாக, உண்மையான பயணிகளின் பயண அனுபவம் மேம்படுத்தப்படுகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்