‘லியோ’ படத்துக்கு அதிகாலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு புதுச்சேரியில் அனுமதி!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் லியோ திரைப்படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார். அதன்படி, லியோ திரைப்படத்துக்கு நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி முதலே இப்படத்துக்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதையடுத்து காலை 7 மணிக்கு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நீதிமன்றத்தை அணுகியது. பின்னர் 7 மணி காட்சிக்கு தமிழக அரசிடம் உரிய அனுமதி கோரி மனுதாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையேதான், புதுச்சேரியில் காலை 7 மணி காட்சி உட்பட லியோ திரைப்படத்துக்கு நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். புதுவை நகரம் மற்றும் புதுவை கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்