கும்பகோணம்: “தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 3 வட்டங்களில் பள்ளிக் கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட 35 கட்டிடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று திறந்து வைத்தார். முன்னதாக, கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் கட்டப்பட்டு வரும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அலுவலகக் கட்டிடப் பணியினை அவர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த கட்டிடத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியுடன் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் திறப்பு விழாவுக்குத் தேதி வழங்குகிறேன் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்வு நேரத்தில் நடைபெறும் மோசடி என்பது இப்போது மட்டும் நடப்பது கிடையாது. வட மாநிலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் இதுபோன்று தொடர்ச்சியாகவே மோசடி நடைபெற்று வருகிறது. அதுவும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்கள் ப்ளூ டூத் போன்ற உபகரணங்களைக் கொண்டு மோசடி செய்து வெற்றி பெறுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது. ஆனால், தமிழகப் பள்ளி, கல்லூரிகள், அரசுத் தேர்வாணையத் தேர்வுகளில் இதுபோல் முறைகேடு இல்லாமல் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதே எங்களுக்குப் பெருமிதம்" என்றார் அவருடன் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago