சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில், சூலூர்பேட்டை-தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (அக்.17) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இன்று ரத்தாகும் ரயில்கள்: மூர்மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு இன்று (அக்.17) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இன்று இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று நண்பகல் 12.35, மாலை 6.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், ஆவடி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படவுள்ளன.
பகுதி ரத்தாகும் ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு இன்று காலை 7.30, 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-சூலூர்பேட்டைக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
» பெங்களூருவில் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.95 கோடி ரொக்கம் பறிமுதல்
» ஏழுமலையான் கோயிலில் 2-ம் நாள் நவராத்திரி பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீநிவாசர் பவனி
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று மதியம் 1.20, பிற்பகல் 3.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் சூலூர்பேட்டை-எளாவூர் இடையேபகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago