பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால்டாக்சி உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என்றும், அந்நிறுவனங்கள் கமிஷன்தொகையை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும், அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கால்டாக்சிகளை இயக்கி வரும் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொடர்ந்துபுகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும், பைக் டாக்சிமுறையை ரத்து செய்ய வேண்டும், கால்டாக்சிகளுக்கு அரசே தனி செயலிஉருவாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

500-க்கும் மேற்பட்டோர்: சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட14 சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. சென்னை சின்னமலையில் நடந்த இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹூசைன் கூறியதாவது:

ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்.. கால்டாக்சிகளுக்கு கட்டண நிர்ணயம், செயலி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கி உள்ளோம். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE