பூந்தமல்லி: பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த சுகாதார துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவமனையை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, பூந்தமல்லி மட்டுமல்லாமல், பூந்தமல்லியை சுற்றியுள்ள நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், அகரமேல் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவமனையில் போதிய சுகாதார வசதிகள் உள்ளதா? உள் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் பார்க்கப்படுகிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வராமல் இருந்ததையும், கை கழுவும் தொட்டியில் தண்ணீர் வராமலும், குழாய் உடைந்த நிலையில் இருந்ததையும் அறிந்த சுகன்தீப் சிங் பேடி, சின்ன மருத்துவமனையை முறையாக பராமரிக்க முடியாதா? என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
» ஏழுமலையான் கோயிலில் 2-ம் நாள் நவராத்திரி பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீநிவாசர் பவனி
தொடர்ந்து, அவர் மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பிரசவத்துக்கு பிறகு தாய்மார்கள் தங்கி சிகிச்சை பெறும் அறை கட்டுமான பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிறகு, சுகாதார துறை செயலர், பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை துரிதமாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago