கடலூர்: கடலூர் மாவட்ட டெல்டா பகுதிவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருப்பது காட்டுமன்னார்கோவில் அருகேஉள்ள வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின்முழு கொள்ளளவு 47.50 அடியாகும்.
காவிரி தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து, அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ளகீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர்வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மழை காலங்களில் எரியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.
இந்த நிலையில். சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கீழணையில் வடவாறு வழியாக தண்ணீரை அனுப்பி வைத்து ஏரியை நிரப்பினர்.இதன்மூலம் ஏரி 47.50 முழு கொள்ளளவை எட்டியது. ஏரிக்கு நீர்வரத்துஇல்லாத நிலையிலும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சூழலிலும் கீழணையில் தேக்கி வைத்த தண்ணீரைக் கொண்டு ஈடுகட்டி, தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை மூடல்: கர்நாடகத்தில் இருந்து நீர்வரத்துஇல்லாத சூழலில் மேட்டூர் அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இதனால்கீழணைக்கு காவிரி தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கீழணையில் 6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.இதில்இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு விநாடிக்கு 115 கன அடி, வடவாற்றில் விநாடிக்கு 203 கன அடி தண்ணீர் விடப்பட்டு வருகிறது.
» ஹிஸ்புல்லா தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
» காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பதிலடி: ஈரான் அமைச்சர் உறுதி
நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ள போதிலும், நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது. இதில் இருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 42 கன அடியும், பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 106 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் வெகுவாக குறையும்: நீர் வரத்து இல்லாத நிலையில் தொடர்ந்து இதுபோல தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறையும். ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும். இதனால்சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழல் உரு வாகும்.
கீழணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் வடலூரில் இருந்துபண்ருட்டி வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, அந்தத் தண்ணீரை சென்னைக்கு வீராணம்ஏரி தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய்கள் வழியாகச் செலுத்தி, சென்னைக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் இதுபோல பற்றாக்குறை ஏற்பட்டபோது என்எல்சி சுரங்க நீரை பெற்று லாரிமூலம் சென்னைக்கு எடுத்து சென்றுஈடுகட்டப்பட்டது. அடுத்தடுத்து ஏற்படும் நெருக்கடியைக் கொண்டு,சென்னை குடி நீரின் தேவைக்காகமேற்கண்ட இருகட்ட பணிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago