இந்திய கம்யூனிஸ்ட் மூத்த உறுப்பினர் கந்தசாமி மறைவுக்கு இரா.முத்தரசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் கே.கந்தசாமி மறைவுக்கு இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த உறுப்பினரும், மதுரை மாவட்ட முன்னோடி தலைவர்களில் ஒருவருமான கே.கந்தசாமி (90) உடல்நலக் குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலமானார். சுதந்திர போராட்ட காலத்தில் மதுரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர்.

கட்சி நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று (17-ம் தேதி) பிற்பகல் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ளஅவரது வீட்டில் நடைபெறும். கே.கந்தசாமி மறைவுக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்