‘தமிழ் கட்டாயம் இல்லை’ - புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் மீண்டும் போராட்டம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழ்ப் பாடம் கட்டாயமாக இல்லாததால் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவிகள் வகுப்புகளை மீண்டும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதன்படி புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் புதிய கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, "தற்போது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு வரை 4 பருவத் தேர்வுகளுக்கு தமிழ்ப் பாடம் கட்டாயமாக உள்ளது. ஆகையால் தமிழ்ப் பாடங்களை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையின்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2 பருவ தேர்வுகளுக்கு மட்டும் தமிழ்ப் பாடம் உள்ளது 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விருப்பத் தேர்வாக தமிழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், தமிழ்ப் பாடத்தை மத்திய அரசு புறக்கணிக்கும் வேலையை செய்து வருகிறது. எனவே, தற்போது உள்ள பாடப்பிரிவுகள் அனைத்தும் கட்டாயமாக இருக்க வேண்டும் தமிழ் கட்டாயப் பாடமாக கொண்டு வர வேண்டும். மேலும், கூடுதலாக எந்தப் பாடத் திட்டங்களை கொண்டு வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தற்போது இருக்கும் பாடத் திட்டத்தை எடுக்கக் கூடாது. புதிய கல்விக் கொள்கையில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்