147 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல்: இலங்கை காலி துறைமுகம் அருகே கண்டுபிடிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையில் உள்ள காலி துறைமுகம் அருகே 147 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல் அந்நாட்டு கடல்சார் தொல்பொருள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராயல் மெயில் நிறுவனம் (ஆர்.எம்.எஸ்) இங்கிலாந்தில் 1516-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தபால் சேவை அளித்து வருகிறது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக ராயல் மெயில் நிறுவனம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தகவல் பரிமாற்ற வசதிக்காக கப்பல் மூலம் தபால் சேவையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக 1815-ம் ஆண்டு இலங்கையில் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து 1838-ம் ஆண்டு கொழும்புக்கும் காலிக்குமிடையில் குதிரை வண்டி தபால் சேவையும், 1850-ம் ஆண்டில் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால் சேவை புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டது.

01.11.1871 அன்று இலங்கையின் காலி துறைமுகம் அருகே மூழ்கிய ராயல் மெயில் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆர்.எம்.எஸ். ரங்கூன் என்ற தபால் சேவை கப்பல் 147 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி துறைமுகத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 25 மீட்டர் ஆழத்தில் முழ்கிய நிலையில் இலங்கையின் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

ரங்கூன் தபால் சேவை கப்பல் 1863-ம் ஆண்டு இங்கிலாந்தில் சமுத்ரா சகோதரர்களால் கட்டப்பட்டது. இதன் நீளம் 89.85 மீட்டர், அகலம் 11.61 மீட்டர் மற்றும் ஆழம் 5.36 மீட்டர் ஆகும். 1,776 டன் எடையுள்ள இந்த கப்பல் நீராவி மூலம் இயக்கக்கூடியது. 1.870 குதிரைத்திறன் கொண்ட இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 12 நாட்டிக்கல் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

கடலின் ஆழம் காரணமாக. கப்பல்களில் பெரும்பாலானவை மணல் மூலம் மூடப்பட்டும், டைனமைட் மீன்பிடியின் காரணமாக கப்பலில் பெரும்பாலான பகுதிகள் சிதறி கிடக்கின்றன. இதில் கப்பலின் நீராவி டாங்கிகள், புரோப்பல்லர் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த மூழ்கிய கப்பலை இலங்கையின் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்