மாநகராட்சி ஊழியர்கள் வராததால் மூடிக்கிடக்கும் உடற்பயிற்சி கூடங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி நடத்தி வரும் விளையாட்டு போட்டியில் பணிகள் வழங்கப்பட்டதால் மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஊழியர்கள் வரவில்லை. இதனால் அவை மூடிக்கிடக்கின்றன.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டியை மாநகராட்சி நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்த விளையாட்டு போட்டிகள், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா விளையாட்டு திடலில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் மாநகராட்சி பணியாளர்கள் 1,690 பேர், மாநகராட்சி கவுன்சிலர்கள் 75 பேர் என மொத்தம் 1,765 பேர் பங்கேற்று கையுந்து பந்து, கால் பந்து, எறிப்பந்து, கோகோ, கபடி, இறகுப் பந்து, நீச்சல், சதுரங்கம், கேரம், தடகளவிளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் காலை9 மணிக்கு விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றனர்.

சென்னை மாநகராட்சி சார்பில்மாநகரம் முழுவதும் 140 உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை திறந்து பராமரிக்க தலா ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், மாநகராட்சி நடத்தி வரும் விளையாட்டு போட்டி ஏற்பாட்டு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9-ம் தேதி முதல்இவர்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வராததால், பல உடற் பயிற்சிக் கூடங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் பலர் கடந்த ஒரு வாரமாக உடற்பயிற்சியை தொடர முடி யாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வடசென்னை பகுதி இளைஞர்கள் கூறும்போது, "மாநகராட்சி விளையாட்டு போட்டிகள் காரணமாக ஊழியர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு வருவதில்லை. உடற்பயிற்சிக் கூட பணியாளருக்கு நெருக்கமானவர்கள்சிலர், மாற்று சாவியை வைத்துக்கொண்டு திறந்து, அவர்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு மூடிவிடுகின்றனர்.

இதனால் நாங்கள் சிரமத்துக்குள்ளாகிறோம். எனவே, உடற்பயிற்சி கூடங்களை அன்றாடம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், விளையாட்டு போட்டிகளை மாலை நேரத்தில் மட்டுமே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்