சென்னை: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த பாமகதலைவர் அன்புமணி மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டுமென மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அன்புமணி: ராமேசுவரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல்கடுமையாக கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இலங்கை செயல்பட்டு வருகிறது.
அதற்கேற்ப ஒருபுறம் கடல் கொள்ளையர்கள், மறுபுறம் மீனவர்கள் கைது என இருமுனை தாக்குதலை நடத்துகிறது. எனவே இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» மக்களை கேடயமாக பயன்படுத்த ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டம்: தாக்குதலை தாமதப்படுத்தும் இஸ்ரேல்
ஜி.கே.வாசன்: மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருக்கும்போதே இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. இதனால் 2 நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago