பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிறுவனங்கள் இணைப்பில் சிக்கல்: பயணிகள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என மக்கள் எதிர்ப்பு

By கி.ஜெயப்பிரகாஷ்

சென்னையில் தற்போதுள்ள பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கட்டணம் உயர்த்தக் கூடாது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென் னை யில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1971-ம் ஆண்டு தீர்மானித்தது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிமீ தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப்பணிகளும், 2-வது கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டன.

தினமும் 150 சர்வீஸ்

தற்போது, சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் - பரங்கி மலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5 கிலோ மீட்டரில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் அங்குள்ளவர் கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடைய, பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப் பதற்கான ஆய்வுப் பணி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

கூடுதல் செலவு

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் வழித்தடம் தெற்கு ரயில்வேயில் பெரிய சொத்தாக இருக்கிறது. மற்ற வழித்தடங்களைக் காட்டிலும், இங்கு மின்சார ரயில்களை இயக்குவதில் கொஞ்சம் சிரமம், கூடுதல் செலவும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இதற்காக, மெட்ரோ ரயிலுடன் இணைப்பது என்பது ஏற்க முடியாது என அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் அதிகளவில் கூடும் வேளச்சேரி, மயிலாப்பூர், தரமணி, திருவான்மியூர் போன்ற இடங்கள் இருப்பதால், சரியான முறையில் திட்டமிட்டால், வருவாயைப் பெருக்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்றொரு தரப்பினர் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பறக்கும் ரயில்சேவை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை மின்சார ரயில் சேவையுடன் இணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னும் 8 அல்லது 10 மாதங்களில் இதற்கான பணியை முடித்து விடுவோம்” என்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘பறக்கும் ரயில்சேவை மெட்ரோ ரயிலுடன் இணைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், வழக்கமான பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் ஏற்ற வகையில் புதிய வசதிகளைக் கொண்டு வரவுள்ளோம். எனவே, இணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும், விரைவாகவும் மக் கள் பயணம் செய்ய இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக் கும்’’என்றனர்.

கட்டணம் உயர்வு கூடாது

சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறும் போது, ‘‘பறக்கும் ரயில்சேவை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதிலும், ரயில் நிலையங்களை மேம்படுத்துவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தற்போதுள்ள ரயில் கட்டணமே இருக்க வேண்டும். சென்னை கடற்கரை - வேளச் சேரி இடையே ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஒப்பிடும்போது மெட்ரோ ரயில்களில் பல மடங்கு வசூலிக்கப்படுகிறது. எனவே, ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் கட் டண உயர்வு கூடாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்