செர்பியாவில் காலமான கல்வியாளர் பத்மா ராஜனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: செர்பியாவில் காலமான கல்வியாளர் பத்மா ராஜன் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் அவரது குடும்பத்தினர், பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற, ஏழை குழந்தைகளின் கல்விமேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து, பணியாற்றி வந்தவர் கல்வியாளர் பத்மா ராஜன். இவர்,சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். பின்னர்,செர்பியாவுக்கு வந்து, ஆதரவற்றகுழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்த அவர், தனது61-வது வயதில், கடந்த ஜூலை25-ம் தேதி காலமானார்.

இந்நிலையில், பத்மா ராஜன் கல்வி பயின்ற சென்னை தியாகராயநகர் வித்யோதயா மகளிர் பள்ளியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில்,பள்ளி மாணவிகள், 1970-களில் பத்மா ராஜனுடன் படித்தவர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்திய வம்சாவளி அமெரிக்க கல்வியாளர் பத்மாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தி.நகர்
வித்யோதயா மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி வெங்கடேசன் தலைமையில்
கடந்த திங்கள்கிழமை நடந்தது.அப்போது பத்மா நினைவாக, பள்ளி வளாகத்தில்
மாமரக்கன் று நடப்பட்டது. பத்மாவின் சகோதரரும், அமெரிக்க வாழ் தொழில் துறை
ஆலோசகருமான முரளி ராகவன் , சென்னை தொழிலதிபர்
சுபா ஸ்ரீ காந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

பத்மாவின் நினைவாக பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வெங்கடேசன் தலைமை வகித்து பேசியபோது, ‘‘அமெரிக்காவில் தனக்கு பெரும்ஊதியம் தந்த ஆடிட்டர் தொழிலைஉதறிவிட்டு, ஆசிரியர் படிப்பில் தேர்ச்சி பெற்று, பள்ளி ஆசிரியரானார் பத்மா. லாப நோக்கம் இல்லாதஓர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, ஏழை குழந்தைகளின் கல்விக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்’’ என்று புகழாரம் சூட்டினார்.

பத்மா நினைவாக பணமுடிப்பு: வரும் கல்வி ஆண்டு முதல், 12-ம்வகுப்பில் விளையாட்டு, கல்வியில் முதலிடம் பெறும் மாணவிக்கு பத்மாவின் நினைவாக பணமுடிப்புவழங்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அதற்கான வைப்புத் தொகையையும் பள்ளிக்கு வழங்கினர். நினைவேந்தல் நிகழ்வில் பத்மாவின் சகோதரரும், அமெரிக்கா வாழ் தொழில்துறை ஆலோசகருமான முரளி ராகவன்,சென்னை தொழிலதிபர் சுபாகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்