தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
- சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள், ஊர்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம்.
- சென்னை காவல் பயிற்சி கல்லூரி ஐஜி தமிழ்சந்திரன் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக நியமனம்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக இருந்த பி.கே.செந்தில்குமாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த மகேஸ்வரி ஐபிஎஸ், திருநல்வேலி காவல் ஆணையராக நியமனம்.
- சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஐபிஎஸ் நியமனம்.
- காத்திருப்பு பட்டியலில் இருந்த தீஷா மிட்டல் ஐபிஎஸ், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவுக்கு டிஐஜியாக நியமனம்
- சென்னை வடக்கு, சட்டம் - ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம்
- பி.சாமூண்டீஸ்வரி, சென்னை டிஜிபி காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமனம்
- திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.பி.சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
- தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த இ.டி.சாம்சன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடியாக நியமனம்
- திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம்
- இ.சுந்தரவதனம்,கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
- டி.என்.ஹரி கிரண் பிரசாத், கடலோர பாதுகாப்பு படை எஸ்.பியாக நியமனம்(ராமநாதபுரம்)
- பி.சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்டம் எஸ்.பியாக நியமனம்
- சென்னை டிஜிபி தலைமையக எஸ்.பியாக தீபா சத்யன் நியமனம்