மதுரை: மதுரையில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரது செல்போனை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர் காஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது தாஜுதீன்கமித். இவரது வீட்டுக்கு இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். அவர்களை விசாரணைக்கென அவரை அழைத்துச் சென்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது, சந்தேகத்துக்குரிய சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தாஜு தீனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரிடம் இருந்து செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் தாஜூதீன் பேசும்போது, “நான் பிஹாருக்கே போகாத நிலையில், பிஹார் பயண வழக்கு தொடர்பாக என்னிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். என்னைப் போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்” என்றார். இதன்பின் அவரை விசாரிக்காக அழைத்துச் சென்றனர்.
என்ஐஏ தரப்பில், “முகமது தாஜுதீன் இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிக்கிறோம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago