இணையவழி விளையாட்டு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்தினை தடுக்கும் , ஒழுங்குபடுத்தும் விதமாக, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 9, 2023) இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அச்சட்டத்தின் படி கீழ்காணும் தலைவர் / உறுப்பினர்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (Tamil Nadu Online Gaming Authority) ஒன்றினை அமைத்து 18.08.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன் ஆணையத்தின் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.சி. சாரங்கன் மற்றும் பேராசிரியர் சி. செல்லப்பன், உளவியல் மருத்துவர் ஓ. இரவீந்திரன், இன்கேஜ் குழுவின் நிறுவனர் விஜய் கருணாகரன் ஆகியோர் உறுப்பினர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாணையமானது, 15.09.2023 அன்று முதல், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம், முதல் மாடி, நகர்ப்புற நிருவாக கட்டடம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம். ஆர். சி. நகர்,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28, என்ற முகவரியில் செயல்படத் துவங்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்