சென்னை: போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
விரைவு பேருந்துகளை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை (நவ.10) பயணம் மேற்கொள்ள திட்டமிடுவர். அவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சனிக்கிழமை (நவ.11) பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (அக்.12) தொடங்கவுள்ளது.
வியாழக்கிழமை (நவ.9) பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு நேற்றே தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் களுடன் கூட்டம் நடத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago