வழிப்பறி செல்போன்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தல்? - காவல் நிலையங்களில் அலைக்கழிப்பால் புகார் தர தயக்கம்

By என்.சன்னாசி

மதுரையில் வழிப்பறி செய்யப்படும் விலை உயர்ந்த செல்போன்களை உள்ளூரில் விற்றால் போலீஸிடம் சிக்கி விடுவோம் என்பதால் திருடர்கள் வடமாநிலங்களுக்கு கடத்தி விற்பதாக கூறப்படுகிறது. இதனால் அவற்றை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மதுரை நகரில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், பொதுமக்களிடம் நகை, பணம் வழிப்பறி செய்யும் சம்பவத்துக்கு இணையாக செல்போன்கள் பறிப்பும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. செல்போன்களை எளிதில் விற்கலாம் என்பதால் அவற்றை பறிமுதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆடம்பரச் செலவுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலரும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறைக்கு சவால்

பெரும்பாலும் பொது இடங்கள், சாலையில் செல்போனில் பேசிக் கொண்டே நடப்பது, பைக்கில் செல்லும்போதும், மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்தும், வழிமறித்தும் செல்போன்களை பறித்துச் செல்கின்றனர். அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதும் ஒருவர் பைக்கை இயக்குவதும், மற்றொருவர் பின்னால் அமர்ந்தும் சென்று கைவரிசை காட்டுகின்றனர். இருப்பினும் நகரில் செல்போன்கள் வழிப்பறி புகார் அதிகரிப்பது காவல் துறையினருக்கு சவாலாக இருந்தது.

இதை தடுக்க, காவல் உதவி ஆய்வாளர் மருதலட்சுமி தலைமையில் 15 பேர் அடங்கிய தனிப் படை ஒன்றை அமைத்து, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சமீபத்தில் உத்தரவிட்டார். அப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட புகார்களில் வழிப்பறி திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.

காலை நேரங்களில் கைவரிசை

திருட்டு செல்போன்களை குறைந்த விலையில் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கும் 20-க்கும் மேற்பட்ட பஜார் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜார்களில் பழைய செல்போன்களை வாங்கும்போது, விற்பவர்களிடம் முகவரி ஆவணங்களை பெறவேண்டும் என, போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதனிடையே காலை நேரங்களிலேயே வழிப்பறி கும்பல் கைவரிசை காட்டுவதாக தெரிகிறது.

இரு நாட்களுக்கு முன், மதுரை வடக்குமாசி வீதியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு பேசி சென்ற வடமாநில ஊழியர் கல்லாராம் என்பவரிடம் அதிகவேக சக்தி கொண்ட பைக்கில் பின்தொடர்ந்த இருவர் அவரிடம் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். கல்லாராம் அவர்களது பைக் பதிவெண்ணை அறிய முயன்றபோது, கறுப்பு துணியால் மறைக்கப்பட்டு இருந்தது. இதே போன்று கிருஷ்ணாபுரம் காலனியில் சிவராஜ் மஸ்தான் என்பவர் பைக்கில் பேசிக் கொண்டே சென்றபோது மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்த 3 பேர் அவரிடம் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்தனர்.

அவரது பைக்கில் பேசிக் கொண்டு சென்றபோது, மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்த 3 பேர் அவரிடம் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை 2 நாளுக்கு முன் பறித்தனர்.

காவல் நிலையங்களில் அலைக்கழிப்பு

இதுபோன்ற சூழலில் புகார் கொடுக்க சென்றால் காவல் நிலையங்களில் செல்போன் பில் போன்ற +ஆவணங்களை கேட்டு தாமதம் செய்வதால் புகார் கொடுப்பதையே தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து கல்லாராம் கூறும்போது ‘‘ காலை 10 மணி அளவில் வடக்குமாசி வீதி அருகே செல்போனில் பேசிக் கொண்டே சென்றேன். பைக்கில் பின் தொடர்ந்த இருவர் கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். பின்தொடர்ந்து ஓடியபோது, அவர்கள் கறுப்பு துணியால் வண்டியின் பதிவெண்ணை கட்டியும், ஹெல்மெட் அணிந்தும் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. புகார் ரசீது கொடுக்க அலையவிடுவதால் அதை தவிர்த்து விட்டேன்” என்றார்.

கவனம் தேவை

காவல் துறையினரிடம் கேட்டபோது, “செல்போன் பறிப்பு வழக்குகளில் பலவற்றில் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம். திருட்டு செல்போன்களை வாங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜார்களில் நடவடிக்கை எடுப்பதால் கிராமப்புறங்களில் விற்கின்றனர். விவரம் தெரியாமல் கிராம இளைஞர்களும் வாங்கி விடுகின்றனர். யாராக இருந்தாலும் திருட்டு செல்போன் வாங்கினால் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.வழிப்பறி செல்போன்களில் மாற்று சிம்கார்டு போட்டு பயன்படுத்தினாலும் கண்டுபிடித்து விடலாம். காவல் துறையினரின் நடவடிக்கை தீவிரமாக இருப்பதால் மதுரையில் வழிப்பறி செய்யப்படும் செல்போன்களை சிலர் வடமாநிலங் களுக்கு கடத்தி சென்று விற்பதாக தெரிகிறது. உள்ளூரில் அதை பயன்படுத்துவதையும் தவிர்க்கின்றனர். இருப்பினும், விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி உபயோகிப்பவர்களுக்கும் கவனம் தேவை” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்