சென்னை: பள்ளிக்கல்வி துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ்பெற்றனர். வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களும், பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி பணிநியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.
இவர்களை போலீஸார் கடந்த 5-ம் தேதி காலையில் கைது, மாலையில் விடுவித்தனர். இதில் பகுதிநேர ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அதேநேரம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்து மீண்டும் டிபிஐ வளாகம் முன்பு கூடினர்.
» இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்: பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் தொழிலதிபர்!
» பாபர் அஸமின் ஆட்டத்தை பார்க்க 850 கி.மீ தூரம் பயணித்த இந்திய சிறுமி!
இதையடுத்து, மீண்டும் போலீஸார் அவர்களை கைது செய்து சமூகநலக் கூடங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்த இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னைதலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
சங்கத்தின் பொருளாளர் கண்ணன் கூறும்போது, ‘மாணவர் நலன் கருதி பணிக்கு திரும்புகிறோம். அரசு மீது நம்பிக்கை உள்ளது. 3 மாதத்துக்குள் முதல்வர் நிச்சயம் உரிய முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’’ என்றார். ஆசிரியர்கள்வழக்கம்போல வரும் 9-ம் தேதி (திங்கள்) முதல் பணிக்கு திரும்ப உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago