கிரிக்கெட் போட்டிக்கு 2,000 போலீஸார் பாதுகாப்பு: சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் நாளை (அக்.8) மற்றும் அக்.13, 18, 23, 27 ஆகியதேதிகளிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெவ்வேறு அணிகள் மோதுகின்றன. இதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புபணிகளில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்பட பல்வேறு பிரிவுகளைச்சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து மாற்றம்: விக்டோரியா ஹாஸ்டல் (கெனால் ரோடு) சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழிபாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் அரசு பேருந்துகள், பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடைய லாம்.

பாரதி சாலை - ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள்இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், உழைப்பாளர் சிலை - காமராஜர் சாலை வழியாகபொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம்.

போர் நினைவுச் சின்னம் வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலைவழியாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக உள்ள கடற்கரைஉட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்குச் செல்லலாம்.

காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம். அனுமதி உள்ள வாகனங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட் டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்