மதுரை: மதுரை விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் பயணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்,கடந்த 3-ம் தேதி திருச்சி வழியாக இலங்கை சென்றுள்ளார். பின்னர்,அங்கிருந்து பாங்காக் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால்,அதற்கான விமானம் ரத்து செய்யப் பட்டதால், இலங்கையிலிருந்து விமானம் மூலம் அவர் நேற்று மீண்டும் மதுரை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் அவரை சோத னையிட்டனர்.
அப்போது, அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் செல்வக்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை என்ற பெயரில் மதுபானம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்வதோடு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், கேள்வி கேட்டால் பயணிகள் தாக்கப்படும் சம்பவமும் நிகழ்வதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
» பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழில் மைய பொது மேலாளர் வீட்டில் ரூ.8 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்
இதுகுறித்து விமான நிலைய உயரதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago