திமுக கூட்டணியில் ராமநாதபுரம், திருச்சி தொகுதிகளை கேட்க திட்டம்: ஐயுஎம்எல் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலில் ராமநாதபுரம், திருச்சி ஆகிய 2 தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் மாநிலத் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச் செயலாளர் கேஏஎம் முகம்மது அபூபக்கர், பொருளாளர் எம்எஸ்ஏ ஷாஜகான் உட்பட அடுத்த 4 ஆண்டுகளுக்காக புதிதாக தேர்வான மாநில, சார்பு அணி நிர்வாகிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

அவர்களுக்கு கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்தார். புதிய நிர்வாகிகளுக்கு கூடுதல் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கவுரவ ஆலோசகர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் பவள விழா நிறைவுமாநாடு, டெல்லியில் நவ.16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அழைக்க உள்ளோம். வேப்பூர் அருகே முஸ்லிம் லீக் சார்பில் நவ.4-ம் தேதி மருத்துவ கல்லூரி தொடங்கப்படுகிறது. தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இண்டியா கூட்டணி உருவான நாளில் இருந்து பிரதமர் பேச்சில் குழப்பம் அதிகம் உள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தாங்கள் தோல்வியை தழுவப்போவதாக அவர்களே கூறுகின்றனர். மக்களவை தேர்தலிலும் அதே நிலைதான் ஏற்படும். முஸ்லிம்களை இந்திய மக்களாக அங்கீகரிக்க மறுக்கின்றனர். அதனாலேயே பாஜகவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் செல்வதில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஒரு நாடகம். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தன்னால் இயன்றதை செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். விடுதலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்.

மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, 2 தொகுதிகளை கேட்போம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த தொகுதி வழங்கப்படும் என்று நம்புகிறோம். அடுத்து, திருச்சியை கேட்டுப் பெறுவோம். வேலூர் தொகுதியை இதுவரை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்கும் தொகுதியை திமுக வழங்காமல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்