நான் வெற்றி பெறுகிறேனோ? இல்லையோ? ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார் விஷால். முதலில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது, பின்னர் ஏற்கப்பட்டு பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது தேர்தல் ஆணையமும் வேட்புமனு நிராகரிப்பை பொறுத்தவரை, தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என தெரிவித்திருக்கிறது. மேலும், 3 மணிக்குள் வேட்புமனுவில் முன்மொழிந்து பின்பு மறுத்த 2 பேரையும் 3 மணிக்குள் ஆஜர்படுத்தினால்வேட்புமனுவை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த அறிவிப்பு குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனது வேட்புமனுக்கு முன்மொழிந்த பின்பு மறுத்த இரண்டு பேரையும், இன்று (டிசம்பர் 7)தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தி விளக்கம் அளிக்கும் பட்சத்தில் எனது மனு மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஊடகம் மூலகமாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை செய்வதற்கு 2 மணி நேரங்கள்தான் உள்ளன.
எனது வேட்புமனுக்கு முன் மொழிந்த தீபன், சுமதி இருவரையும் காணவில்லை. அவர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது பாதுகாப்பு குறித்து நான் மிகுந்த கவலையில் உள்ளேன். நான் வெற்றி பெறுகிறேனோ? இல்லையோ? ஜனநாயகம் தோற்றுவிட்டது.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago