சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 4 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. அனைத்துஎம்பிபிஎஸ் இடங்களும் கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன. கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றுகல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பிடிஎஸ் படிப்பில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாகவுள்ளன. பிடிஎஸ் படிப்புக்கு அக்டோபர் 10-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த காலஅவகாசம் உள்ளது. எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான காலஅவகாசம் செப்.30-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. 4-வது சுற்றுக்கு பின்னர் உச்ச நீதிமன்றஅனுமதி பெற்றே காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைநிரப்ப முடியும். இவ்வாறு தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago