வறட்சி நிவாரணம் வழங்காததற்கு முதுகுளத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் கண்டனம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே பயிர் காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததைக் கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சி மட்டியரேந்தல் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் சத்திய பிரியா தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் அர்ச்சுனன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே. பாக்கிய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பகுதி விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர், கூட்டத்தில் வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரி வித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE