சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 812 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழகபோலீஸார் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 12 முதல் 28-ம் தேதி வரையிலான 16 நாட்களில் தமிழகம் முழுவதும் 8 பெண்கள் உள்ளிட்ட 223 பேர், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 6,824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 812 வெளி மாநிலக் குற்றவாளிகள் உட்பட, மொத்தம் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின், 24,511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 137 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்-அப்குறுந்தகவல், புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். அனைத்துமாவட்டங்களுக்கும் பிரத்யேகவாட்ஸ்அப் எண் தரப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago