விருத்தாசலம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு 30 நாட்கள் (அக். 15 வரை) அவகாசம் அளித்துள்ளது. கடந்த 15 தினங்களில் அவ்வாறு முறையீடு செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய தரவுகள் இல்லை; தகவல் இல்லை என்ற காரணங்களின் அடிப்படையில்தான் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மைய பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15 -ம்தேதி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 14-ம்தேதி முதலே பணம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விண்ணப்பித்து உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள், அந்தந்த வட்டங்களில் மேல்முறையீட்டு உதவி மையம் மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்து, அதன்பின் தவறான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளது என அறியும்பட்சத்தில் இ-சேவை மையங்ள் மூலம், அடுத்த 30 நாட்களுக்குள், அதாவது அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பங்கள் விலக்கப்பட்டதற்கான காரணிகள் விளக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3 லட்சத்து 6 ஆயிரம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரு.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
» துலாம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2023
» பெருகும் ஆக்கிரமிப்புகள்... பெருக்கெடுக்கும் கழிவுநீர்... - பொலிவை இழக்கும் செம்பாக்கம் ஏரி!
இதையடுத்து நிராகரிக்கப்பட்டவர்கள், உதவி மையங்களுக்குச் சென்று அதற்கான காரணத்தை அறிந்த போது, பெரும்பாலானவர்களுக்கு, விண்ணப்பதாரர் குறித்த தரவுகளும், தகவலும் இல்லை என்ற காரணிகளே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலருக்கு பரிசீலனையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரி, ஆதார் முகவரி மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு விவரங்கள் சரியாக இல்லாத நிலையில் ‘உரிய தகவல் இல்லை’ என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிடும் விண்ணப்பதாரரின் பெயர் உள்ளிட்ட சில தரவுகள் அரசின் நடப்புத் தரவோடு பொருந்தாத நிலையில், ‘உரிய தரவுகள் இல்லை’ என்று குறிப்பிடப்படுகிறது.
4 சக்கர வாகனங்கள் வைத்திருத்தல், குடும்பத்தில் எவரேனும் வருமான வரி செலுத்துதல், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருத்தல், ஏற்கெனவே அரசின் ஓய்வூதியம் பெறுவோர் என்ற வகையில் சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகுதியானவர்களுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டும், அதை வங்கி நிர்வாகம் ஏற்கெனவே உள்ள கடனுக்காக பிடிக்கப்பட்ட செயலும் நடந் துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை அதனால் இத்தொகை பிடித்தம் செய்யப்பட்டது என்ற புகார்களும் வந்ததாக உதவி மைய தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வருவாய் துறையினரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, “தகவல் இல்லை, தரவுகள் இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் இ-சேவை மையம் மூலம் முறையாக உரிய தகவல்களுடன் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில், ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை’ என்ற காரணத்துக்காக, வங்கிகள் மகளிர் உரிமைத் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம். ‘விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்’ என அரசு அறிவித்துள்ளது” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago