தொடர்ந்து 5 ஆண்டுகளாக டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) தனது ஏற்றுமதி திறமைக்கு சான்றாக கடந்த 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை ரசாயனங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (கேப்எக்ஸில்) அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு 2020-21 காலகட்டத்துக்கான ஏற்றுமதிக்கான சிறப்பு விருதும் கிடைத்தது.

2022-23 நிதியாண்டில் ரூ.5,106.69 கோடி விற்று முதலை எட்டியுள்ளதுடன், ரூ.730.85 கோடி அளவுக்கு அதிபட்ச ஏற்றுமதி வருவாயையும் ஈட்டியுள்ளதன் பின்னணியில் டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சி சதவீதம் மற்றும் ஏற்றுமதி இடங்களின் எண்ணிக்கை போன்ற முக்கிய குறிகாட்டிகளை உள்ளடக்கிய விருது அளவுகோல், டிஎன்பிஎல்-ன் பரவலான உலகளாவிய ரீதியிலான தரத்துக்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மக்களவை தலைவர் ஓம்பிர்லா கடந்த செப்.16-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு மதிப்புக்குரிய இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்