அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கடந்த வாரம் கோவையில் அறுவைசிகிச்சை மூலம் சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுக்காமல் அடுத்த சில நாட்களிலேயே சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், திண்டுக்கல் கோமதிபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்துபோது அமைச்சர் பெரியசாமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அமைச்சர் பெரியசாமி ஒரு சில நாட்களில் வீடு திரும்பவார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்