சென்னை: ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மனிதநேய தொழில்நுட்பங்கள் பற்றிய 3 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் மனிதநேய முன்னேற்றத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைப் பற்றி புகழ்பெற்ற நிபுணர்களுடன் விவாதம் நடைபெற்றது.
விழாவில் சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்துபேசும்போது, சிந்தனைத் தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொழில்நுட்ப முன்னேற்றம் சமுதாயத்துக்கு உதவ வேண்டும் என்றார்.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்க உரையாற்றும்போது, ``கல்வி இச்சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களின் முயற்சியால் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் கண்டுபிடித்து மக்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.
தற்போது செயற்கை நுண்ணறிவு துறையின் பயன்பாடு பல துறைகளில் பரந்து விரிந்து இருக்கிறது. கணக்கியல் மற்றும் வங்கித் துறையில் இதன் பயன்பாடு உலக அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாட்டின் விவசாய வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு அடித்தளமாக விளங்குகிறது. இத்துறையில் புதிய கண்டுபிடிப்பு ஆர்வங்களை அதிகப்படுத்தினால் இந்தியா மிகச் சிறந்த பொருளாதார வல்லரசாகத் திகழும் வாய்ப்பு உள்ளது'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago