டெங்கு பாதித்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து டெங்கு பாதிப்புடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் மனைவி சுமித்ரா (35). இந்த தம்பதியருக்கு பிரித்திகா (15) தாரணி (13) யோகலட்சுமி (7) அபிநிதி (5) புருஷோத்தமன் (8 மாதம்) என 5 குழந்தைகள். இவர்களில் யோகலட்சுமி, அபி நிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், யோக லட்சுமியை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அபி நிதி, புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் கடந்த 26-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.27) நள்ளிரவில் அபிநிதி உயிரிழந்தார். குழந்தை புருஷோத்தமனுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்