‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிக்காக கோவை மாநகராட்சிக்கு குடியரசு தலைவர் விருது வழங்கினார்

By செய்திப்பிரிவு

கோவை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சிக்கு குடியரசு தலைவர் விருது வழங்கினார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணிகுளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களின் கரைப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை, ரேஸ் கோர்ஸ் நடைபாதை ஆகிய இடங்களில் மாதிரி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின், ஸ்மார்ட் சிட்டி மிஷன் இயக்குநரால் ‘ஸ்மார்ட் சிட்டி விருதுகள் - 2022’ கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன.

இதில், கோவை மாநகராட்சிக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டன. பில்ட் என்விரான்மென்ட்’, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேசிய அளவில், ‘பில்ட் என்விரான்மென்ட்’ பிரிவில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக கட்டமைப்பை ஏற்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டது.

மேலும், ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தெற்கு மண்டல அளவிலும் கோவை மாநகராட்சி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது.

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக கட்டமைப்பை ஏற்படுத்தியதற்கான விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க, கோவை மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார். தெற்கு மண்டல அளவில் முதலிடம் பிடித்ததற்கான விருதை ஸ்மார்ட் சிட்டி திட்ட பொது மேலாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சரவணக் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்