போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 2-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்குதல் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் நேற்று முன்தினம் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. சென்னையில் மட்டும் காலை முதல் மாலை வரை போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

சென்னை பல்லவன் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஹெச்எம்எஸ் சங்கப் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் அப்பர், போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் துணை பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்