குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கண்காட்சியில் காட்சிக்காக வைத்திருந்த உணவை உண்ட திமுக ஒன்றிய செயலாளர்கள்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அடரியில் பல்துறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு நடந்த திருமண மண்டபம் முன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் குறித்த உணவுகளை தயாரித்து, என்ன வகையான சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலுடன் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர் அப்போது அங்கு வந்த தாய்மார்களிடம் இந்த சத்தான உணவு முறைகள் குறித்தும், அவற்றை குழந்தைகளுக்குத் தருவதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அப்போது அங்கு வந்த மங்களூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட திமுகவினர், ‘இது என்ன?, இது என்ன?’ எனக் கேட்டுக் கொண்டே, அங்கிருந்த சிற்றுண்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டனர். அப்போதுஅங்கிருந்த அங்கன்வாடி பணியாளர்கள் எதையும் கேட்க முடியாமல் அமைதியாக நின்றிருந்தனர்.

அப்போது விழாவுக்கு வந்திருந்தநபர் ஒருவர், “இவை குழந்தைகளுக்காக காட்சிப்படுத்தப்படும் உணவுகள்; இதை எடுத்து நீங்கள் சாப்பிடலாமா!” எனக் கேட்டபோது, “உணவு தரமாக உள்ளதா என சோதித்து பார்த்தோம். அப்படி இல்லாமல் குழந்தைகள் இதை சாப்பிட்டு, அவர்களுக்கு ஏதும் ஆனால் என்ன செய்வது!” என்று எதிர்க்கேள்வி எழுப்பினர்.

இது போன்று விழாக்களில் சத்துணவு வகைகளை காட்சிப்படுத்த அரசு தரப்பில் நிதி எதுவும் ஒதுக்காத பட்சத்தில், அலுவலர்கள் தங்களது சொந்த செலவில் இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தி வருகின்றனர். அதையும் கட்சிப் பிரமுகர்கள் கபளீகரம் செய்வது முகச் சுளிப்பை ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்